பித்தத்திலிருந்து விடுபட சித்த வைத்தியம்

பித்தத்தின் வகைகள்


பாசகம்: இரைப்பை, சீரணப்பை இவற்றின் நடுவில் இருந்து கொண்டு ஐம்பெரும்பூதங்களால் ஆக்கப்பட்டிருந்தாலும், இதனிடம் நெருப்பின் குணம் அதிகமாக இருப்பதாலும், நீரின் குணங்கள் குறைவாக இருப்பதாலும், தன் திரவகுணத்தை விட்டுவிட்டு தன்னைச் சார்ந்த வாயு, ஈரத்தன்மை இவற்றின் காரணமாக உடலுக்கு உதவி புரிகிறது.
pitham neenga
பித்தம் நீங்க இயற்கை வைத்தியம்

அதாவது உடலுக்குச் சூட்டையும், உணவை செரிக்கவும் செய்கிறது. அதனால் இதற்கு `அக்னி' என்று அழைக்கப்படுகிறது. உணவை செரிக்கச் செய்து அதிலிருந்து சத்தான பகுதியையும், தேவையற்ற மலத்தையும் பிரிக்கிறது. மற்ற இடங்களிலுள்ள பித்தங்களுக்குத் தன்னிருக்கையிலிருந்து கொண்டே, ஊட்டமளிக்கிறது.

ரஞ்சக பித்தம்: இது இரைப்பையை உறைவிடமாகக் கொண்டு அங்குள்ள உணவின் நீர்ச்சத்தான பகுதிக்கு செந்நிறத்தை அளிக்கிறது.

ஸாதக பித்தம்: இது இதயத்தை தங்கு மிடமாகக் கொண்டு அறிவு, நுண்ணறிவு, தந்நிறைவு, செயல்படுவதில் ஊக்கம் இவைகளைத் தந்து தனக்கு விருப்பமான புலப்பொருள் அடைதல், செயல் இவற்றின் ஈடுபாட்டினால் அதை நிறைவேற்றிக் கொள்ளுதல் ஆகியவற்றைச் செய்கிறது.

ஆலோசக பித்தம்: இது கண்களில் தங்கி அவற்றிற்குப் பார்க்கும் சக்தியை அளிக்கிறது.

ப்ராஜக பித்தம்: சருமத்தை உறைவிடமாகக் கொண்டு சருமத்திற்கு ஒருவித ஒளியைக் கொடுத்து அதை நன்கு விளங்கச் செய்வதால் இதற்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. இது எண்ணெய் குளியல், நீராடுதல், மேற்பூச்சு இவற்றைப் பக்குவப்படுத்தி ஊட்டமளித்து ஒளியை வெளிப்படுத்துகிறது.

பித்தம் நீங்க இயற்கை மருத்துவ முறைகள்: 


 • இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.
 • இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.
 • மாம்பழத்தை பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.
 • எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட் டால் பித்தத்தை தணிக்கும்.
 • ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.
 • பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.
 • விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.
 • அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.
 • பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.
 • கமலாப்பழம்(ஆரஞ்சு)சாப்பிட்டால் உடல் உஷ்ணம் தணியும்.
 • நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.
 • எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.
 • அரச மரக் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத் தில் உள்ள பித்தம் குறையும்.
மேற்கண்டவைகளில் ஏதேனும் ஒன்றை செய்து வர பித்தம் நீங்கி, உடல் நல்ல நிலைக்கு மாறும். 

Post a Comment

0 Comments