சக்கரை வியாதி சட்டென தீர குறிப்புகள் !

இப்போது நாட்டில் பெரும்பாலனவனை ஆட்டிப் படைப்பது சர்க்கரை நோய் தான். 30 வயதிற்கு பிறகு இந்நோய் இளைஞர்களை கூட ஆட்டி படைக்கிறது. இதற்கு காரணம் அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவு முறைகள் தான்.


பாஸ்புட் கலாச்சாரம் ஆகிவிட்ட இந்த காலத்தில் நோய்களும் விரைவாக நம்மை தாக்கி ஆட்டுவிக்கிறது. குறிப்பாக சர்க்கரை வியாதி.

சர்க்கரை வியாதி ஏன் வருகிறது? அதற்கான காரணங்கள் என்ன?


பரம்பரை மூலம் வரலாம். அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி க்கு நோய் இருந்தால் மரபுவழி வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. 1 to 5% சதவிகிதம் வாய்ப்பு உண்டு. பெற்றோர்களுக்கு சர்க்கரை வியாதி இருந்தால் பிள்ளைகளுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. கண்டிப்பாக வரும் என்று சொல்ல முடியாது.

சர்க்கரை வியாதி எப்படி வருகிறது?


நாம் உட்கொள்ளும் உணவுகளிலிருந்து கிடைக்ககூடிய குளுக்கோஸ் எரிபொருளாக மாறுகிறது. இந்த குளுகோஸ் இரத்தத்திற்குள் சென்று பின்னர் இரத்தத்தின் மூலம் உடலில் உள்ள கோடிக்கணக்கான உடற்செல்களுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. கணையம் எனும் உடல் உறுப்பு இன்சுலின் எனும் வேதிப்பொருளை உற்பத்தி செய்கிறது. இந்த இன்சுலின் இரத்தத்தின் வழியாக செல்களை சென்றடைகின்றன. அங்கு குளுகோஸ் ஐ சந்தித்து, செல்களானது குளுகோஸ்-ஐ தங்களுக்குள் எடுத்துக் கொள்ளச் செய்கிறது. குளுக்கோஸ்-ஐ செல்கள் எரித்து உடலுக்கு தேவையான சக்தியினை உற்பத்தி செய்து தருகிறது.

இது சர்க்கரை வியாதி இல்லாதவர்களின் உடல் நிலை. ஆனால் அந்த நோய் இருக்கும்போது ஏற்படக்கூடிய மாற்றங்கள்

குளுக்கோஸ்-லிருந்து சக்தியை உற்பத்தி செய்வதை சர்க்கரை நோய் கடினமாக்குகிறது. வயிறு போன்ற ஜீரண உறுப்புகள், உணவினை குளுகோஸ்-ஆக மாறச் செய்கின்றன. அவை இரத்தத்திற்குள் சென்று இரத்தத்தின் வழியாக செல்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் இரத்தத்திலுள்ள குளுக்கோஸ் செல்களுக்குள் செல்ல முடிவதில்லை.  ஏனெனில்,


 • இன்சுலின் போதுமான அளவு இல்லாதிருக்கலாம்.
 • இன்சுலின் அதிகளவில் இருந்தும், இந்த இன்சுலின் செல் உறையில் உள்ள ரிசப்ட்டார் எனப்படுவதை திறக்க முடியாத நிலை ஏற்படுவதினால் செல்லானது குளுக்கோஸ்-ஐ உட்கொள்ள முடியாத நிலை
 • எல்லா குளுக்கோஸ் துகள்களும் செல்களுக்குள் செல்ல மிகக் குறைந்த அளவே ரிசப்ட்டார்கள் இருக்கலாம்.
 • எல்லா குளுக்கோஸ் துகள்களும் இரத்தத்திலேயே தங்கியிருக்கும். இதனை ஹைப்பர்கிளைசீமியா (இரத்தத்தில் குளுக்கோஸ் அல்லது சர்க்கரை மிகவும் அதிகளவில் இருப்பது) என்பர். செல்களில் போதிய அளவு குளுக்கோஸ் இல்லாததினால் உடல் நன்கு செயல்பட தேவையான சக்தியினை உற்பத்தி செய்ய முடிவதில்லை.


அதனால் உடம்பில் செயற்கையாக ஆங்கில வைத்திய முறையில் தினம் மாத்திரைகள் அல்லது ஊசிகளின் மூலம் இன்சுலினை செலுத்தி சர்க்கரை அளவு கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்படுகிறது.

சர்க்கரை நோய் வருவதற்கு காரணங்கள்.

 • அதிக உடல் உழைப்பு இல்லாமை, 
 • இரத்தத்தில் அதிக கொழுப்பு, 
 • போஷாக்கான உணவு  எடுக்காமல் இருப்பது, 
 • போதுமான நார்ச் சத்து உணவு எடுக்காமை
 • போதுமான புரத சத்து உணவுகள் சேர்க்காமல் இருப்பது, 
 • இரத்த அழுத்தம்,
 • மருந்துகளின் பின்விளைவுகள், 
 • கணையத்தில் ஏற்படும் கிருமித்தொற்று, 
 • கொலஸ்ட்ரால்  


போன்ற காரணங்களால் சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

சர்க்கரை வியாதியை குணப்படுத்துவது எப்படி?


சர்க்கரை நோய் கட்டுப்படுத்தலாம். முழுவதும் குணப்படுத்துவது என்பது கடினம்தான். சரியான மருத்துவம் செய்துகொள்வதன் மூலம் 100% சர்க்கரை வியாதியை கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம். மருத்துவர்களின் ஆலோசனை பின்பற்றி, உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி / நடைபயிற்சி மேற்கொண்டால் சர்க்கரை வியாதி இருந்த இடம் இல்லாமல் போய்விடும்.

சர்க்கரை வியாதிக்கு வைத்தியம்

சர்க்கரை வியாதிக்கு சரியான வைத்தியம் உண்டு. அதை தொடர்ந்து செய்தால் சர்க்கரை அளவு நார்மல் ஆவதோடு, மீண்டும் சர்க்கரை அளவு கூடவோ, குறையவோ செய்யாது. என்ன செய்ய வேண்டும் அதற்கு?


சர்க்கரையின் அளவை குறைப்பது எப்படி?


 • தினமும் காலையில் சிறிதளவு வெந்தயத்தை வாயில் போட்டு விழுங்க வேண்டும். 
 • முருங்கை கீரை அற்புதமான மருந்து. 
 • பாகற்காயை வட்ட வடிவ துண்டுகளா நறுக்கி, நிழலில் உலர வைத்து, அதை பொடியாக்கி (மிக்சியில் அரைத்து) ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள். அதை தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும். விரைவில் குணமடையும்.
 • கற்கண்டு - இஞ்சி கலந்து சாப்பிட்டால் சர்க்கரை அளவு குறையும்.


சர்க்கரை வியாதி குணமாக்க முடியுமா?

கண்டிப்பாக குணமாக்க முடியும். உடலில் எந்த ஒரு வியாதியும் அதிலிருந்துதான் உற்பத்தி ஆகிறது. அந்த வியாதியை உடலை பரமரிப்பதன் மூலம் தடுக்கலாம். பராமரிக்காமல் விட்டுவிட்டு நோயை வளர்த்துவிட்டு, பிறகு அதற்கு மருந்து எடுத்துக்கொள்வதன் மூலம் பல வியாதிகளை மனிதன் வலிய உடம்பிற்கு சேர்த்துக்கொள்கிறான். அதைத் தவிர்க்க சரியான - முறையான உணவு எடுத்துக்கொள்வதுதான் சரியான வழி. அதனால்தான் திருமூலர் "உணவே மருந்து" என்றார்.

சர்க்கரை நோயும் அப்படிதான்.


யாருக்கெல்லாம் வரும் சர்க்கரை வியாதி?

தற்பொழுது சர்க்கரை வியாதி வருவதற்கு வயது எல்லாம் ஒரு பொருட்டு இல்லை. முன்று 40 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு வந்தது. தற்பொழுது சிறு குழந்தைகளுக்கு கூட சில காரணங்களால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

சக்கரை நோய் சட்டென மறைய டிப்ஸ்


சர்க்கரை சட்டென மறைய எல்லாம் எந்த ஒரு டிப்ஸ்ம் இல்லை. இருந்தாலும் இதைச் செய்து பார்க்கலாம்.

கேழ்வரகு வைத்தியம்:  கேழ்வரகு உணவு எடுத்துக்கொள்ளலாம். கூழ் காய்ச்சி குடிக்காமல், அடை, புட்டு செய்து சாப்பிடலாம். இதனால் சர்க்கரை அளவு கட்டுப்படும்.
வெண்டைக்காய் வைத்தியம்: 1 வெண்டைக்காயை துண்டுகளாக வெட்டி ஒரு டம்ளர் நீரில்இரவு முழுக்க ஊற வைக்க வேண்டும். அதை காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு குடிக்க வேண்டும். இதனால் சர்க்கரை வியாதி குணமாகும். சுவாசக் கோளாறு இருந்தாலும் சரியாகிவிடும்.
வெண்டைக்காய் சர்க்கரை வியாதிக்கு அருமருந்து. 

Tags: sarkkarai noi, diabetes, neerilivu noi, sakkari noi vaithiyam, sarkkarai noi muligai vaithiyam, neerilivu gunamaga, insulin sakkarai, iyarkkai vaithiyam, sarkarai noikku sidha maruthuvam.Post a Comment

0 Comments