மான் கொம்பு மருத்துவ பயன்கள்

man kombu maruthuva payangal

மான் கொம்பு மருத்துவ குணம் 

மான் வேட்டையாடுவது, மானின் உடல் உறுப்புகளை பயன்படுத்துவது இந்திய அரசால் தடை செய்யபட்டுள்ளது. மான் கொம்பு மற்றும் தோல் விற்பனை உரிமம் உள்ளவரிடம் வாங்கி பயன் படுத்தலாம். மான் கொம்பு, கலைக்கோடு மற்றும் சிருங்கி என்றும் அழைக்கபடுகிறது 

மான் கொம்பின் மருத்துவ பயன்கள்

மான் கொம்பு துவர்ப்பு சுவை உடையது, இந்திரயத்தை கெட்டி படுத்தும், உடல் பலப்படுத்தும், இரத்தி அழுத்தத்தை சமன் செய்யும், இருதயம் மற்றும் நுரையிரலுக்கும் தேவையான சத்துக்களை கொடுக்கிறது, இதனால் இருதய நோய்களை பெருமளவு குணமாக்குகிறது.

கலைமான் கொம்பின் மருத்துவ பயன்.

கலைமான் கொம்பினால் கைகால் எரிச்சல், அஸ்தி மேகம், முத்தோடம், பெருந்தாகம், மார்பு நோய், கண் நோய்கள், பிசாசம், காய்ச்சல், இருமல், கோழையுடன் கலந்து வரக் கூடிய இரத்தம் ஆகியன நீங்கும்.

மான் கொம்பு சுத்தி முறை

மான் கொம்பை சிறுதுண்டுகளாக்கி, இரண்டாய் பிளந்து அகத்தியிலை சாற்றில் ஒரு நாள் முழுவதுமாக ஊறவைத்து சாற்றை நீக்கி கொம்பு துண்டுகளை சுத்தமான நீரில் கழுவி உலர்த்தவும் இதே போல் ஏழு முறை செய்ய இதுவே உயர்ந்த சுத்தியாகும்.

மான் கொம்பு வைத்தியம்

சந்தனக் கல்லில் வெந்நீர் விட்டு, மான்கொம்பை மை போல் அரைத்து மேற் பூச்சாக பயன்படுத்த மார்பு நோய், சுழுக்கு, அடிகாயம், தோல் வெடிப்பு, தலை நோய்கள், நாள் பட்ட சரும நோயில் காணும் நமைச்சல், பீஜ வீக்கம், நெறிகட்டு, கீழ்வாயு முதலியன நீங்கும்.

பெண்கள் ருதுவாக 

பருவ வயதை தாண்டியும் ருவாகாத பெண்களுக்கு மேற்ச் சென்ன படி மான் கொம்பை உரைத்து கழற்ச்சி காய் அளவு நீராகாரத்தில் 4 அல்லது 5 நாள் கொடுக்க பலனை அளிக்கும் என்கின்றனர்.

கண்படலம் தீர

கலைமான் கொம்பை நாட்டு பசு மாட்டின் நெய்யிலும் தேனிலும் மைபோல அரைத்து வைத்துக் கொண்டு கண்ணி விட கண்படலங்கள் தீரும்.


Post a Comment

0 Comments